சென்னை : தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, வடக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
*பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஸ்ரிஷ்டி சிங், ஐபிஎஸ், தெற்கு திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ராஜேஸ்வரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
*பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி கயல்விழி தமிழ்நாடு சீரடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆர்.வி. ரம்யா பாரதி, ஐபிஎஸ், சென்னை குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஏ. மயில்வாகனன், ஐபிஎஸ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
*சேலம் வடக்கு துணை கமிஷனர் சிவராமன் வேலூர் எஸ்பி ஆகவும்
*திருச்சி தெற்கு துணை கமிஷனர் டி. ஈஸ்வரன் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஆகவும்
*ரயில்லே எஸ்பி ஐ. ஈஸ்வரன் கோயம்பேடு துணை கமிஷனர் ஆகவும்
*கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித் குமார் – சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்
*சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் சுஹாசினி – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி ஆகவும்
*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி நாகஜோதி – போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பி/ முதல்வர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
