×

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25% ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு : மிடில் கிளாஸ் மக்கள் ஏமாற்றம்

மும்பை: ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான 3 நாள் கூட்டம் நேற்று முடிந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அறிவித்தார்.அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாகவே இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரியில் கால் சதவீதமும், ஏப்ரலில் கால் சதவீதமும் , ஜூன் மாதத்தில் அரை சதவீதமும் டிசம்பரில் கால் சதவீதமும் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

Tags : Reserve Bank ,Mumbai ,
× RELATED ரூ.5 முதல் ரூ.40,000 வரை.. மராட்டியத்தில்...