இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக அனைவராலும் விரும்பப்படுகிற யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உள்ளது. மிகச் சிறிய மாநிலமான இதன் எல்லையானது தமிழகம், ஆந்திரா, கேரளா என விரிந்தாலும் பரப்பளவோ குறைவுதான். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய இந்த யூனியனில் தற்போது மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.
ஆனால் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் 1946 மற்றும் 1955ல் பிரதிநிதித்துவ சட்டசபை தேர்தல் நடந்தது. 1954ம் ஆண்டு நவம்பர் 1ம்தேதி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின்னர், 1962ல் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்தது. அன்று முதலே யூனியன் பிரதேசமாகவே இதுவரையும் புதுச்ேசரி தொடர்ந்தாலும் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்புக்கு பஞ்சமில்லாத நிலை உள்ளது.
மிகச் சிறிய யூனியன் பகுதி என்பதாலோ என்னவோ இதுவரை 6 முறை ஆட்சிக் கவிழ்ப்பையும், 6 முறை குடியரசு தலைவரின் ஆட்சியும் புதுச்சேரியில் நடந்துள்ளதுதான் வரலாறு. 1974ல் ராமசாமி (அதிமுக), 1977ல் ராமசாமி (அதிமுக), 1980ல் ராமச்சந்திரன் (திமுக), 2000ல் ஜானகிராமன் (திமுக), 2001ல் சண்முகம் (காங்.), 2016 நாராயணசாமி (காங்.) ஆகிய வருடங்களில் ஆட்சி கவிழ்ப்பை முதல்வர்கள் சந்தித்தனர். ேமலும் 1968, 1973, 1974, 1978, 1984, 1991 காலங்களில் குடியரசு தலைவரின் ஆட்சியும் நடைபெற்றுள்ளன.
