×

சொந்த ஊருல ஒன்னு கூட கிடையாது பாஜவுக்கு கேட் போடும் எடப்பாடி

இலைகட்சி தலைவரு தாமரையோட கூட்டணி போட்டது ஊரறிஞ்ச சேதி. பொதுவெளியில் நாங்கள் மனமொத்த கூட்டணி என்று இருதரப்பும் கூறினாலும், பல விஷயங்களில் மனக்கசப்பு நீடிக்குதாம். அதிலும் இடையில் குக்கர்காரரும் வந்து சேர்ந்து கொண்டதால், தொகுதி பிரிப்பதில் குடுமிப்பிடி சண்டை துவங்கியிருக்காம்.

எது எப்படி இருந்தாலும் இலைகட்சி தலைவரு, ஒரு விஷயத்தில் ரொம்ப தெளிவா இருக்காராம். தனது சொந்த மாவட்டத்தில் தாமரைக்கு தப்பிதவறிக்கூட, ஒரு தொகுதியை ஒதுக்கி விடக்கூடாது என்பது தானாம் அது. இங்குள்ள வீரமான ெதாகுதியில் பிசினஸ்மேன் ஒருத்தர், மலராத கட்சி சார்பில் போட்டியிட பெரும் ஆர்வம் காட்டுறாராம்.

சில மாதங்களுக்கு முன்பு மாங்கனி டிஸ்டிக்கிற்கு வந்த அல்வாநகரத்து புதியதலைவரை, தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று விருந்து படைத்து மகிழ்ச்சியூட்டினாராம். இதனால் புதிய தலைவரு, பிசினஸ் மேனுக்கு இந்த தொகுதியை எப்படியாவது வாங்கிக் கொடுக்க முடியுமா? என்று யோசிக்கிறாராம். ஆனால் இலையின் தலைவரோ, இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், தெளிவாக காய்நகர்த்துறாராம்.

Tags : BJP ,Leaf Party ,Lotus ,Cookers ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை