×

முறுக்குக்கு மாஜி எம்பி அமைச்சர் சண்டை

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் முறுக்குக்கு பெயர் போன மணப்பாறை தொகுதியும் அடங்கும். மணப்பாறையை சேர்ந்த அதிமுக மருத்துவர் அணி மாநில நிர்வாகி டாக்டர் விஜயகுமார், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளருமான சந்திரசேகர் ஆகியோர் தங்களுக்கு சீட் வேண்டும் என முக்கிய நிர்வாகிகளிடம் துண்டு போட்டு வைத்துள்ளதாக தெரிகிறது. வரும் தேர்தலில் உங்களுக்கு தான் சீட் என ஆசை வார்த்தையை தலைமையும் அள்ளி விட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘விஜயகுமார், சந்திரசேகர் ஆகிய இருவரும் தலைமைக்கு ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். முன் அனுபவம் அதிகமாக இருக்கிறது. எனவே, எனக்கு சீட் கொடுங்கள் என கூறி வருகிறார் சந்திரசேகர். இதைப்போல், பழையவர்களுக்கு சீட் வேண்டாம், என்னை போன்ற புது முகத்திற்கு சீட் கொடுங்கள் என டாக்டர் விஜயகுமார் தலைமையிடம் கூறி வருகிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்பியான திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பா.குமார் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகுமாருக்கு சீட் கொடுத்தால், அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான தங்கமணி கோபித்து கொள்வார். தன்னுடைய ஆதரவாளருக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், அவருடைய அடுத்த கட்ட நகர்வு ‘கொஞ்சம் வேறு மாதிரி’ இருக்கும்.

இதை தலைமை விரும்பவில்லை. விஜயகுமார், சந்திரசேகர் இருவரிடமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இல்லை. இந்த விஷயமும் தலைமைக்கு நன்கு தெரியும். இருவருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது நேருக்கு நேர் மோதி கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இருவரிடம் நீடிக்கும் மோதலை தவிர்க்க கூட்டணிக்கு ஒதுக்கி விடலாம் என தலைமை நினைக்கிறது. கூட்டணிக்கு ஒதுக்கினால் இருதரப்பினரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றனர்.

Tags : Murukku ,Trichy district ,Manapparai ,Dr. ,Vijayakumar ,AIADMK ,AIADMK MLA ,Marungapuri North Union ,Chandrashekar ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை