×

சிறப்பு சுருக்க திருத்த பணி: புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்

 

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டர் குலோத்துங்கன் கூறியதாவது: சிறப்பு சுருக்கத் திருத்த நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட தீவிர கள ஆய்வில், புதுச்சேரி மாவட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் முகவரியில் இல்லாதவர்கள் என கண்டறியப்பட்ட சுமார் 85,531 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

இதற்கு முன்னதாக, 1200க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டதால் அதன் எண்ணிக்கை 918ஆக உயர்ந்திருந்தது. தற்போது வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 78 வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டு, மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 918லிருந்து 840ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Puducherry ,Puducherry District ,Election Officer ,Collector ,Kulothungan ,
× RELATED அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை