×

உதவி காவல் ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம்

மதுரை: உதவி காவல் ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. SI தேர்வு முடிவுகள் அறிவிப்பை சிலமணிநேரங்களில் திரும்பப்பெற்றது ஏன் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டது. தென்காசியைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Madurai ,High Court ,Tamil Nadu Government Uniformed Service… ,
× RELATED தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம்...