சென்னை: இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்ற ஜெய்சங்கர் பேச்சுக்கு சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் பியூஷ் கோயல் அமைச்சகத்தால் கையாளப்பட்டது என்று சொல்லும் ஜெய்சங்கர்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர். ராணுவ முடிவுகளையே ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் எடுக்க முடியாதபோது இது ஒன்றும் பெரிய தவறில்லைதான். ஒப்பந்தத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை டிரம்ப் வெளியிட்டால்தான் மோடிக்கே தெரியும் என்றாலும் வியப்பில்லை என சு. வெங்கடேசன் கூறினார்.
