×

8 எம்.பிக்கள் சஸ்பெண்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப். 5: நாடாளுமன்றத்தில் பட்ெஜட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முழுவதும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் மற்றும் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் விஜயராஜன், பொன்த்தாய், பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது, மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க முயலும் ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தனர். தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவுரையாற்றினார். இதில் திரளான நிர்வாகிகள்மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

 

 

Tags : Communist Party of India ,Marxist ,Madurai ,Venkatesan ,Madurai Municipal Corporation ,MCC ,Modi ,BJP government ,
× RELATED தூய்மை காவலர்கள் தமிழக அரசுக்கு நன்றி