காங்கயம், பிப்.5: காங்கயம் அடுத்த ஊத்துக்குளி, காத்தாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (56). இவரது மனைவி பூங்கொடி (47). இவர், மது போதையில் அடிக்கடி வீட்டில் மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் மனைவியுடன் சண்டையிட்டவர் வீட்டிற்கு அருகே உள்ள யாரும் இல்லாத ஓட்டு வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு கொண்டார்.
பின்னர், குடும்பத்தினர் நாச்சிமுத்துவை மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், நாச்சிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
