தேவதானப்பட்டி, பிப். 5: தேவதானப்பட்டி டிவிநகர் புல்லக்காபட்டி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி(55). இவருக்கும் வீட்டின் அருகே வசிக்கும் காளிமுத்து(67) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன் இவர்கள் தெருவில் சாக்கடை கழிவு தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாதை பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாக்கடை கழிவு நீர் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெறுவதால் இதனால் இரண்டு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து தனலட்சுமி புகாரில் சாதியைச் சொல்லி திட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக காளிமுத்து, முருகன், பாண்டீஸ்வரி ஆகியோர் மீதும், காளிமுத்து புகாரில் தனலட்சுமி, பெருமாள், ஏஷ்வா, முத்துக்காமாட்சி, அமலா, மணிமேகலை, பிரபு, கவுசல்யா ஆகியோர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
