×

உ.பியில் கொரியன் ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்; 9வது மாடியில் இருந்து குதித்து மூன்று சகோதரிகள் தற்கொலை

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் சாஹிபாபாத் பகுதியில் உள்ள டீலா மோர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பாரத் சிட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வருபவர் சேத்தன் குமார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவருக்கு நிஷிகா(16), பிராச்சி(14) மற்றும் பாக்கி(12) ஆகிய பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூன்று சகோதரிகளும் கொரோனா பொதுமுடக்கத்தின்போது, மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக கொரியன் செயலியில் காதல் விளையாட்டுக்கு அடிமையாக இருந்துள்ளனர். பெரும்பாலும் மூன்று பேரும் ஒன்றாக குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், அவர்கள் பள்ளிக்கும் சரிவர செல்லவில்லை. ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இருந்த மூன்று பேரையும் சேத்தன் குமார் கண்டித்துள்ளார்.

இதனால் சிறுமிகள் மூன்று பேரும் மனஉளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமிகள் மூன்று பேரும் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு 9வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மூவரின் உடல்கலைளயும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமிகளின் டைரியில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றி உள்ளனர். அதில், “இதில் உள்ளதை முழுவதுமாக படியுங்கள். எங்களால் கொரியன் விளையாட்டை விட்டு வௌியே வர முடியாது. அது இல்லாமல் நாங்கள் வாழ முடியாது. அப்பா எங்களை மன்னித்து விடுங்கள்” என எழுதப்பட்டு, அழுகையுடன் கூடிய எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : UP ,Ghaziabad ,Uttar Pradesh ,Bharat City ,Deela More ,Sahibabad ,Ghaziabad district ,
× RELATED நாடாளுமன்ற துளிகள்…