புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்துக்கு பின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கான விவாதங்களில் ஈடுபட்டன. இரு தரப்புக்கும் இடையே ஒரு வருடமாக பல்வேறு மட்டங்களில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது நமது விவசாயம் மற்றும் பால் வள துறைகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை இநு்திய தரப்பு உறுதி செய்தது. உணவு மற்றும் விவசாயத்தில் இந்தியாவின் முக்கிய உணர்திறன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை இந்த சபையில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த ஒப்பந்தம் அமெரிக்க சந்தையில் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்றார்.
