- உயர் நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில அரசு
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்...
புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்தும், அதேப்போன்று அதுகுறித்த சட்டத்தில் திருத்தம் செய்தும் பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
இதைத்தொடர்ந்து துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கோடைக்கால அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, \” துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்று வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன்,\\” துணைவேந்தர்கள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் அவசர கதியில் ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.
வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு பதிலளிக்கக் கூட அவகாசம் வழங்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதில்,\\” உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு முக்கிய வழக்கை பட்டியலிட்டு விசாரணை நடத்தியது ஏன்?. ஒரே நாளில் இந்த வழக்கில் எப்படி தீர்வு காண முடியும். குறிப்பாக அவசர அவசரமாக உயர்நீதிமன்றம் வழக்கை ஏன் விசாரிக்க வேண்டும்.
மேலும் விசாரணையின் போது தமிழ்நாடு அரசுக்கு ஏன் பதிலளிக்கக் கூட அவகாசம் வழங்கவில்லை. இவ்வாறான விசாரணை முறையே தவறானதாகும். எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் முந்தைய நடவடிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. அதனால் முன்னதாக அதாவது, துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.
இருப்பினும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக, மாநில முதல்வரே நியமிக்க வகைசெய்யும் சட்டத்துக்கு தடைக் கேட்ட பிரதான மனு மீது உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும். வழக்கின் விசாரணை ஆறு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்மனுதாரர் கே.வெங்கடாஜலபதி தரப்பு வழக்கறிஞர்,\\”இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் முடியும் வரை இதுசார்ந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. அதேப்போன்று துணைவேந்தர்களை நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்,\\” நியமனம் செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து உறுதியை ஏற்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
