×

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி முயற்சி..!!

கொழும்பு: டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவர்த்தை நடத்துமாறு ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4,500 கோடி இழப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிக்கு பிப்ரவரி 15ஆம் தேதி விளையாட வேண்டும். இந்தியா உடனான போட்டியில் மட்டும் விளையட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.

இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வ பதிலுக்காக ஐசிசி தற்போது காத்திருக்கிறது. ஐசிசி விதிமுறைகளின்படி, போட்டி நாளில் ஒரு அணி டாஸுக்கு வரத் தவறினால் மட்டுமே ஒரு போட்டி கைவிடப்பட்டதாகக் கருதப்படும். முறையான விலகலை வெளியிடாததன் மூலம், பாகிஸ்தான் இன்னும் போட்டியின் ஒரு பகுதியாக உள்ளது, இதனால் பிப்ரவரி 15 போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags : ICC ,Pakistan ,India ,T20 World Cup ,Colombo ,Vice President ,Imran Kawaja ,Pakistan Cricket Board ,
× RELATED அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாக். வெற்றி