×

குண்டு எறிதல் போட்டியில் கிருஷ்ணா ஜெயசங்கர் அபாரம்: புதிய தேசிய சாதனை படைத்தார்

நியூ மெக்சிகோ: அமெரிக்காவில் நடந்த உள்ளரங்க குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் உள்ளரங்க குண்டு எறிதல் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், 16.63 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், கிருஷ்ணா ஜெயசங்கர், 16.03 மீட்டர் தூரம் குண்டு எறிந்து சாதனை படைத்திருந்தார். தற்போது, தனது சாதனயை அவரே முறியடித்துள்ளார். குண்டு எறிதல் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் பல திறன் வாய்ந்த வீராங்கனைகள் குழு பங்கேற்றிருந்தது. இருப்பினும் அவர்களை எல்லாம் ஓரங்கட்டி முதலிடத்தை கிருஷ்ணா பிடித்துள்ளார். 2ம் இடம் பிடித்த ஹன்னா ரிச்சர்ட்சன், 15.94 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார்.

Tags : Krishna Jayashankar ,New Mexico ,Krishna Jayashankar Menon ,United States ,New Mexico, United States ,
× RELATED குண்டு எறிதலில் இந்திய பெண் சாதனை