×

3வது டி.20 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி: 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது

 

பல்லேகலே: இலங்கை-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடர் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து வென்ற நிலையில் 3வது போட்டி நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சாம் கரன் 58, ஜோஸ் பட்லர் 25 ரன் அடித்தனர். இலங்கை பவுலிங்கில் துஷ்மந்தா சமீரா 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியில், குசால் மெண்டிஸ் 26, பதும் நிஷங்கா 23 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில்அவுட் ஆகினர்.

19.3 ஓவரில் இலங்கை 116 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 12 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. அந்த அணியின் பவுலிங்கில் ஜேக்கப் பெத்தேல் 4, வில் ஜாக் 3 விக்கெட் எடுத்தனர். சாம் கரன் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் (79ரன், 3விக்கெட்) விருது பெற்றார். முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : England ,T20I ,Sri Lanka ,Pallekele ,Pallekele stadium ,
× RELATED டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன்...