×

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இந்தியாவிலேயே ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 2025-26ம் நிதியாண்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதல் ஆண்கள் 2726 பேருக்கும், மகளிர் 1226 என மொத்தம் 3952 பயனாளிகளுக்கு புதுமையான திட்டங்களுக்கு ரூ.74.75 கோடி மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் நான்கு சக்கர வாகனம் (கனரக, இலகுரக) 1203 பயனாளிகளுக்கு ரூ.3711.79 லட்சமும், மூன்று சக்கர வாகனம் 648 பயனாளிகளுக்கு ரூ.833.73 லட்சமும், மின்சாதன பொருட்கள் மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் செய்ய 447 பயனாளிகளுக்கு ரூ.843.31 லட்சமும், கடைகள் (தையலகம், அழகு நிலையம், மளிகை, எழுதுபொருட்கள் நிலையம் மற்றும் பல) தொழில்கள் செய்ய 1600 பயனாளிகளுக்கு ரூ.2774.42 லட்சமும், பால்பண்ணை அமைத்தல் தொழில் செய்ய 566 பயனாளிகளுக்கு ரூ.317.81 லட்சம் மற்றும் இதர தொழில்ளுக்கு 223 பயனாளிகளுக்கு ரூ.494.38 லட்சமும் என மொத்தம் 4,687 பயனாளிகளுக்கு ரூ.8975.44 லட்சம் மானியத்துடன் கூடிய கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆதிதிராவிடர் முன்னேற்ற திட்டத்தின் கீழ் 7,476 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்த TAHDCO Adi Dravidar மற்றும் Tribal Advancement Society (TATAS) என்ற பெயரில் சமூக அமைப்புகளை உருவாக்கி இத்திட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் 1,189 பயனாளிகளுக்கு ரூ.7.39 கோடியும் கடந்த ஆண்டுகளில் 1,408 பயனாளிகளுக்கு ரூ.7.74 கோடி என மொத்தம் 2,596 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.15.13 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இத்திட்டத்தில் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு ரூ.75 கோடியும், ஒன்றிய அரசு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதமே முழுமையாக செலவிடப்பட்டு விட்டது. இதன் வாயிலாக மேற்கண்ட திட்டத்திற்கு இந்தியாவிலேயே செலவிடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு தனி கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்திட இந்த அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,India ,Dravidar ,Chennai ,Tamil Nadu government ,Chief Minister ,
× RELATED எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் ஒன்றிய பா.ஜ....