×

சேலத்தில் 13ம் தேதி விஜய் பிரசாரம்

சேலம்: தவெக தலைவர் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த செப்டம்பர் மாதத்திற்கு முன்பு பிரசாரத்தை தொடங்கினார். கரூரில் நடந்த பிரசாரத்தின் போது 41 பேர் பலியான பின்பு பாண்டிச்சேரி, ஈரோட்டில் மட்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சேலம் மாநகரில் நடத்த திட்டமிட்டு இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தற்போது சேலம் மகுடஞ்சாவடியில் வரும் 13ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு அனுமதி கேட்டு, சேலம் மகுடஞ்சாவடி தவெக ஒன்றிய செயலாளர் கார்த்தி, சேலம் எஸ்.பியிடம் அனுமதி கேட்டு மனு அளித்து உள்ளார். இதில் கட்சியினர் 11 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 24 ஆயிரம் பேரும் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Salem ,TTV ,Karur ,Pondicherry ,Erode ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும்...