- விஜய்
- தவெகா
- முட்டு
- புலியங்குடி, தென்காசி மாவட்டம்
- பிரதி பொது செயலாளர்
- ராஜ்மோகன்
- மாநில ஒருங்கிணைப்பாளர்
- ரமேஷ்
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தவெக கொள்கை கோட்பாடு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்றான அதிகார பகிர்வை தவெக கொள்கையாக வைத்திருக்கிறது. சரியான நேரத்தில் கூட்டணி அறிவிப்பை விஜய் வெளியிடுவார். அதிகாரப் பகிர்வு என்பது கட்சிகளின் உரிமை. அதனை கேட்பது கடமை. ஆனால் அதை கேட்பவர்கள் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்’ என்றார்.
இதைதொடர்ந்து நிருபர்கள், விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லையே என்று கேட்கப்பட்டதற்கு, நீங்களெல்லாம் யார், நாங்களெல்லாம் யார்?. இவர் விஜய், அவர் விஜய், அந்த பெண் விஜய், இவர்கள் எல்லாருமே விஜய் என்று சுற்றியிருந்த தவெக நிர்வாகிகளை கை காட்டிய ராஜ் மோகன், சாதாரண எளிய வீட்டு பிள்ளைகளும் மக்களும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம், மேடையில் பேசுகிறோம். இந்த அரிய வாய்ப்பை விஜய் கொடுத்துள்ளார். சரியான சந்தர்ப்பத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கும் என்று மழுப்பலாக பதில் அளித்து விட்டு தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவினார்.
* தலைவர்கள் இன்று
முதல்வர் மு.க.ஸ்டாலின் – சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) – சென்னை
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) – சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) – மயிலாடுதுறை குத்தாலம்
நயினார் நாகேந்திரன் (பாஜ மாநில தலைவர்) – சென்னை
பெ.சண்முகம் (சி.பி.எம். மாநில செயலாளர்) – சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ. மாநில செயலாளர்) – சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) – டெல்லி
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) – சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) – சென்னை
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) – டெல்லி
சீமான் (நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்) – சென்னை
விஜய் (தவெக தலைவர்) – பனையூர்
