கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்!

கோயம்புத்தூர்: கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலையை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ், அதனை வாங்கிய சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா வேட்டி, சேலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: