×

வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

ஜோகன்னஸ்பர்க்: வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. முதல் 2 போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வென்று 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. ஷாய் ஹோப் 25 பந்தில் 48 ரன், ஹெட்மயர் 22 பந்தில் 48 ரன் குவித்தனர். இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவரில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. டி காக் 28 ரன்னும், ஜேசன் ஸ்மித் 26 ரன்னும் எடுத்தனர். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது குடகேஷ் மோடிக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.

Tags : West Indies ,Johannesburg ,South Africa ,
× RELATED U19 உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!