×

தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம், தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சுபணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம், சிவானந்தா சாலையில் பணியிடை நீக்கங்களை ரத்து செய்தல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

மேலும், பணியிடை நீக்கங்களை ரத்து செய்தல், அனைத்து நிலையிலும் பதவி உயர்வுகளை வழங்குக மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பொதுமாறுதல் அளித்தல், நீண்ட கால, தூர மாறுதல், பகராண்மை நியமனங்களை ரத்து செய்து கோரிக்கையின் பெயரில் பணியிடமாறுதல் வழங்குதல், அனைத்து நிலைகளிலும் தகுதிகாண் பருவ நிறைவு, தேர்வு மற்றும் சிறப்பு நிலை ஆணைகளை தாமதமின்றி வெளியிடுதல், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு, பதிவு சட்டத்திற்கு புறம்பான சுற்றறிக்கைகளை ரத்து செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள்.

Tags : Federation of Tamil Nadu Registration Department Employees' Unions ,Chennai ,Tamil Nadu Registrars' Union ,Tamil Nadu Registration Department Ministry Employees' Union ,Tamil Nadu Registration Department Office Assistant and Basic Employees' Union ,Sivananda Road, Chepauk, Chennai ,
× RELATED புதுவை தினகரன், விஐடி பல்கலைக்கழகம்...