சென்னை: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் வட மாநில குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 2 வயது குழந்தை கொடூர கொலை செய்யப்பட்டது. கௌரவ்குமாரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிய வழக்கில் திருப்பமாக மனைவி, குழந்தையை கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், பீகாஸ் உள்ளிட்ட 5 பேரை போலீஸ் கைது செய்தது.
கௌரவ்குமார், 2வது வயது குழந்தையின் சடலம் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில் மனைவியின் சடலத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 3 வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் முனிதா குமாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து முனிதா குமாரியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். தொடர்ந்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
