திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி

 

நெல்லை: திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக – காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, கட்சித் தலைவர் அறிவிப்பை வெளியிடுவார். கருத்து கணிப்புகள் வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு மனுக்களைத் தருகிறார்கள். அடுத்தது அமையப்போவது திமுக ஆட்சிதான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன்வைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று கூறினார்.

Related Stories: