×

சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்

ஊட்டி, ஜன. 30: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி நிஷா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுப்பது, வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுப்பது போன்றவைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் கட்டுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விபத்துகளை குறைக்கும் வகையில் எடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பழங்குடியின கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கே சென்று பிரச்னைகளுக்கு தீ்ர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் எஸ்பி. ஆர்டிஒக்கள், டிஎஸ்பிக்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Tags : Ooty ,Collector ,Ooty, Nilgiris district ,Lakshmi Bhavya Taninyu ,SP ,Nisha… ,
× RELATED இளம்பெண் தற்கொலை