×

காயத்துடன் மீட்கப்பட்ட வெள்ளை ஆந்தை சிகிச்சைக்கு பின் வனத்தில் விடுவிப்பு

பாலக்காடு, ஜன.29: பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலம் பஸ் ஸ்டாண்டு மரத்தில் தத்தளித்த வெள்ளை ஆந்தையை வனத்துறையினர் பிடித்து நெல்லியாம்பதி காட்டுக்குள் விடுவித்தனர். தத்தமங்கலம் பஸ் ஸ்டாண்டு மரத்தில் அபூர்வ இனமான வெள்ளி நிற ஆந்தை காயத்துடன் இருந்துள்ளது.

இதனை கவனித்த காய்கறி வியாபாரி ஷாஜகான் ஆந்தையை காயப்படுத்திய காகங்களை விரட்டி கொல்லங்கோடு வனத்துறையினருக்கு தகவலளித்தார். பின்னர் உடனடியாக விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் ஆந்தையை பிடித்து கூண்டிற்குள் அடைத்து அதற்கு சிகிச்சை அளித்தனர். பின் நெல்லியாம்பதி காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.

 

Tags : Palakkad ,Thattamangalam ,Palakkad district ,Nelliyampathy forest ,
× RELATED கரியமலையில் குரங்குகள் தொல்லை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை