தாரமங்கலம், ஜன.30: தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம், சோழவந்தியான் வளவு பகுதியில் அரசு மதுபானத்தை பதுங்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, தாரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சேட்டு(42), மாதேஷ்(65) ஆகிய 2பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
