- எடப்பாடி
- சேலம் மாவட்ட கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை
- சிறப்பு
- தாசில்தார் ராஜ்குமார்
- குண்டத்துமேடு
- பக்கநாடு பஞ்சாயத்து
இடைப்பாடி, ஜன.30: இடைப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சியில் குண்டத்துமேடு பகுதியில் செம்மண் கடத்துவதாக, சேலம் மாவட்ட கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை தனி தாசில்தார் ராஜ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று குண்டத்துமேடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக செம்மண் லோடுடன் வந்த டிப்பர் லாரி வந்தது. அதிகாரிகளை கண்டதும், டிரைவர் லாரியை விட்டு தப்பி சென்றார். இதையடுத்து, அனுமதியின்றி லாரியில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. டிப்பர் லாரியை லாரியை பறிமுதல் செய்து, பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, எஸ்ஐ குழந்தையப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தலை மறைவான லாரி உரிமையாளரையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.
