×

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1.25 கோடி உண்டியல் காணிக்கை

திருத்தணி, ஜன.30: திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், உண்டியல்களில் நகை, பணம் பொருட்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். கடந்த 24 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருக்கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில், கோயில் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் ரொக்க பணம், நகை பிரித்து எண்ணப்பட்டது. எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 86 ஆயிரத்து 026 ரூபாய், 351 கிராம் தங்கம், 4700 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Tiruttani Murugan Temple ,Tiruttani ,
× RELATED புதர்கள் மண்டி காணப்படும் சோழவரம்...