×

பள்ளி மாணவர் திறனறி தேர்வு

மதுரை, ஜன. 29: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி மதுரையில் உள்ள விருதுநகர் நாடார் பள்ளியில் நேற்று நடந்த தேர்வில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 47 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் விஜயகுமார் செய்திருந்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை மாவட்ட பொருளாளர் வெண்ணிலா தேர்வை எழுதிய மாணவர்ளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

 

 

Tags : Madurai ,Tamil Nadu Science Movement ,Virudhunagar Nadar School ,Madura ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்