×

கொந்தகை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

மதுரை, ஜன. 29: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான கீழடி அருங்காட்சியகத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் ஜன.26ம் தேதி எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்வை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணியவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கோயில் இணை கமிஷனர் சுரேஷ், உதவி கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Kodamuzhuku ,Konthagai Perumal Temple ,Madurai ,Tamil Nadu ,Konthagai Deivanayakap Temple ,Madurai Meenakshi Amman Temple ,Keezhadi Museum… ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்