×

நத்தம் அருகே டூவீலர் விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

நத்தம், ஜன. 29: நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (23). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் மனைவி பஞ்சர்வர்ணம் (20) மற்றும் 1 மாத குழந்தையை ஏற்றி கொண்டு உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அருகே வந்த போது பின்னால் வந்த கார் டூவீலரின் மீது மோதியது.

இதில் படுாயமடைந்த அருண்பாண்டி, பஞ்சவர்ணம் மற்றும் குழந்தையை மீட்டு அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Natham ,Arunpandi ,Velayudhampatti ,Pancharvarnam ,Uluppakudi Government Primary Health Centre ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்