பழநி, ஜன. 29: சிவகங்கை மாவட்டம் பனைகாட்டை சேர்ந்தவர் பாண்டி (25). இவர் பழநி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்தார். அப்போது அங்கு டவுன் போலீசார் அவரை பரிசோதித்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
