×

ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜன. 29: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் முருகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுக்குமாடி குடியிருப்பு பணிகள், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த அவர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, பொறியாளர் சுப்ரமணியபிரபு மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

 

Tags : Ottanchathiram ,Madurai ,Zonal Administrative Director ,Murugesan ,Cauvery ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்