×

துவரங்குறிச்சி அருகே சம்பா அறுவடை வயலில் 12 அடி நீள மலைப்பாம்பு

துவரங்குறிச்சி, ஜன.26: துவரங்குறிச்சி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள களத்துப்பட்டியில் திருமக்கோனார்(55). இவரது வயலில் நேற்று காலை சம்பா நெல் அறுவடை பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனே துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வயலுக்குள் இருந்த மலைப்பாம்பினை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாம்பை விடுவித்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Dhuvarangurichi ,Thirumakkonar ,Kalathupatti ,Trichy district ,
× RELATED சட்ட விரோதமாக மதுவிற்ற இருவர் கைது