துவரங்குறிச்சி, ஜன.28: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட் நாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதி அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரைத்தேடி குடியிருப்பு பகுதி அருகே வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியிருப்புக்கு அருகே உள்ள வாய்க்கால் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பினை சிறிது நேரம் போராட்டத்திற்கு பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
