- மீன்சுருட்டி அரசு பள்ளி
- Jayankondam
- ஜெயன்கொண்டம் சட்டமன்றத் தொகுதி
- ஜெயன்கண்டம் யூனியன்
- மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை
- மீன்சுருட்டி பாய்ஸின்…
ஜெயங்கொண்டம் ஜன. 29: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மீன்சுருட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மேல்நிலை முதலாமாண்டு பயிலும் 225 மாணவ, மாணவிகளுக்கு, ரூ.10.52 லட்சம் மதிப்பிலான, விலையில்லா மிதிவண்டிகளை, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சௌந்தரபாண்டியன், ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் இராஜேந்திரன், தலைமை ஆசிரியர் பெரியசாமி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
