- திருச்செந்தூர் முருகன்
- சுப்பிரமணிய சுவாமி கோயில்
- திரிசெந்தூர்
- முருகன்
- இரண்டாவது படை
- திருவேந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் கோயிலில் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதை என 3 வழிகளில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த 26ம் தேதி குடியரசு தின விழா விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது பொது தரிசன வரிசையில் நின்றிருந்த பெண் பக்தர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதைப் பார்த்ததும் போலீசார் வந்து மோதலை தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தை அங்கு வந்த பக்தர்கள், தங்களது செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘‘கோயிலில் வரிசைப் பாதை மற்றும் உள்ளே ஒழுங்குபடுத்தும் பணியில் கூடுதலான போலீசாரை ஈடுபடுத்த வேண்டும்’’ என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
