×

அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு

சென்னை: அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகாரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பரவும் செய்தி:
சென்னையில் பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன ?
பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கௌரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Bihar ,Idiyar ,Government of Tamil Nadu ,Chennai ,Adhyar ,North ,Tamil Nadu ,Northerners ,
× RELATED இஸ்லாமியர்களின் அன்புதான் எனக்கு...