விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி முதல்வர் அசோக், அவரது உதவியாளர் மணிமாறனை காவல்துறையினர் கைது செய்தனர். தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்த மாணவி கடந்த ஜனவரி 20ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்தார். மாணவி தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டத்தை கண்டித்ததால் தற்கொலை. கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராடிய நிலையில் கல்லூரி முதல்வர் அசோக் கைது.
