ஜெயங்கொண்டம், ஜன. 28: தெருநாய் கடித்து ஆடுகள் பலியானதை தொடர்ந்து விவசாயி சாலை மறியலில் ஈடுபட்டார். அரியலூர் மாவட்டம் இலையூர் கோரியம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாண்டியன் (70). இவர் தனது வீட்டில் 4 ஆடுகளை வளர்த்து கூலி தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் பாண்டியன் வீட்டு கொட்டகைக்குள் புகுந்த தெரு நாய்கள், அவரது ஆடுகளை கடித்தது.
இதில் 3ஆடுகள் பலியாகின. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன், ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் பலியான 3 ஆடுகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை இதனால் ஆடுகள் பலியாகியுள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி பொரட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்து நடத்திய பேச்சுவார்தைக்குப்பின்பு பாண்டியன் மறியலை கைவிட்டார்.
