×

பிட்ஸ்

* ஆஸியின் ரிச்சர்ட்சன் ஓய்வு அறிவிப்பு
சிட்னி: கடந்த 2021ல் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் வேகப் பந்து வீச்சாளராக ஆடி முக்கிய பங்கு வகித்த கேன் ரிச்சர்ட்சன் (34), 17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2009ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வந்த நான், எனது முழுமையான அர்ப்பணிப்பை அளித்து வந்தேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வந்த கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்து விட்டதாக கருதுகிறேன். எனவே, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ எனக் கூறியுள்ளார். ரிச்சர்ட்சன், 25 ஒரு நாள், 36 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

* பெரிங்டன் தலைமையில் ஸ்காட்லாந்து டி20 அணி
எடின்பர்க்: வரும் பிப்ரவரியில் இந்தியா, இலங்கை நாடுகளில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்தியாவில் ஆட முடியாது என முரண்டு பிடித்து வந்த வங்கதேசம் அணி நீக்கப்பட்டதை அடுத்து, அதற்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடும் ஸ்காட்லாந்து அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ரிச்சி பெரிங்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ஸ்காட்லாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஓவன் டாகின்ஸ் நேற்று அறிவித்தார்.

* நீளம் தாண்டுதலில் பாவனா சாதனை
ஒக்லஹோமா: இந்தியாவை சேர்ந்த பாவனா நாகராஜ், அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாண பல்கலையில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் 6.47 மீட்டர் தூரம் தாண்டி, புதிய தேசிய சாதனை படைத்தார். கடந்த 2012ல், இந்திய வீராங்கனை மயூகா ஜானி, 6.44 மீட்டர் தூரம் தாண்டி படைத்த தேசிய சாதனையை பாவனா தற்போது முறியடித்துள்ளார். பாவனாவின் தாய் சஹானா குமாரி, உயரம் தாண்டுதல் வீராங்கனை ஆவார். சஹானா, கடந்த 2012ல் நடந்த ஒரு போட்டியில் 1.92 மீட்டர் உயரம் தாண்டி படைத்த தேசிய சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமல் உள்ளது. தாயும், மகளும் தேசிய சாதனைகள் படைத்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது.

Tags : Pitts ,Richardson ,Sydney ,Kane Richardson ,ICC ,Men's T20 World Cup ,
× RELATED ஆட்டி படைக்கும் இந்தியா ஆறுதல் தேடும்...