×

U19 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே அணியை பந்தாடிய இந்திய அணி;  204 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

U19 உலகக் கோப்பை 2026 தொடரில் இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. புலவாயோவில் நடந்த ஐசிசி யு19 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026 சூப்பர் 6 போட்டியில் ஜிம்பாப்வே யு19 அணியை எதிர்த்து இந்தியா யு19 அணி ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டில் விஹான் மல்ஹோத்ரா ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்து இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்தது.

14 வயதான வைபவ் சூரியவன்ஷி 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார், விக்கெட் கீப்பர் பேட்டர் அபிக்யான் குண்டு 61 ரன்கள் மற்றும் டெய்லர் கிலான் படேலின் 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தது கேமியோவும் உதவியது.

பந்து வீச்சில், இந்தியா ஜிம்பாப்வேயை 37.4 ஓவர்களில் வெறும் 148 ரன்களுக்கு சுருட்டியது. வேகப்பந்து வீச்சாளர் ஆர்எஸ் அம்ப்ரிஷ் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் உத்தவ் மோகன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags : U19 World Cup ,Zimbabwe ,India ,U19 World Cup 2026 ,India U19 ,Zimbabwe U19 ,ICC U19 Cricket World Cup 2026 Super 6 ,Pulawayo ,
× RELATED திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய...