ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 37.4 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆணது. விஹான் மல்ஹோத்ரா சதம் அடித்த நிலையில், ஆயுஷ் மத்ரேவின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா அபார வெற்றி பெற்றது.
