துணைவேந்தர் நியமனம் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து 10 சட்டத்திருத்த மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், ‘‘துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு வக்கீல் வில்சன் கோரினார். இதையடுத்து அடுத்த வாரம் பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: