×

சென்னையில் இருந்து சென்ற பஸ்கள் மோதலில் மூவர் பரிதாப பலி: 20 பேர் படுகாயம்

மேலூர்: சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், ஓட்டுனர் மாற்றம் செய்வதற்காக, டிரைவர் கோபிகிருஷ்ணன் சாலையின் இடது ஓரமாக பஸ்சை நிறுத்தினார்.

அப்போது, பஸ்சின் பின்புறம் சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் நின்ற பஸ் நிலைகுலைந்து அருகே உள்ள மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் இறங்கியது. அதிலிருந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனைவி கனக ரஞ்சிதம் (65), பின்புறமாக மோதிய பஸ்சில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சுதர்சன் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், டிரைவர் சென்னையை சேர்ந்த குருமூர்த்தி (28) உட்பட 2 பஸ்களிலும் 20 பேர் படுகாயம் அடைந்து மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் செல்வம் மனைவி மேரி சுசா (45) வழியிலேயே உயிரிழந்தார்.

Tags : Chennai ,Melur ,Nagercoil ,Pallapatti ,Kottampatti ,Madurai district ,
× RELATED மொழிப்போர் தியாகிகளின்...