×

அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு: அவை நடவடிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான 21ம் தேதி மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். ஆனால் நேற்றைய தினம் சட்டசபைக்கு அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் வருகை தராமல் புறக்கணித்தனர். ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை படித்து முடித்த பின்னர் வானதி சீனிவாசன் பேரவைக்கு வந்தார்.

Tags : AIADMK ,BJP ,O. Panneerselvam ,Tamil Nadu ,Governor ,R.N. Ravi ,Tamil Nadu government ,Tamil Nadu… ,
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் குழி தோண்டும் டிடிவி