- மனாலி ஏ டிரக்குகள்
- மணாலி
- சென்னை
- மனாலி ஏ.
- LLC
- ஒன்றிய மாநிலம்
- பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
- முல்லைகெயில்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- வேலூர்
மணலி: சென்னை மணலி ஆ.முல்லைவாயில் பகுதியில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் எல்.பி.ஜி.கேஸ் சிலிண்டர் நிரப்பும் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகின்றது. தற்போது ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், சிற்றுண்டி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள், மணலி, ஆ.முல்லைவாயில், பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வாசலில் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் நிரப்பும் நிறுவனத்தின் சுமார் 70க்கும் மேற்பட்ட லாரிகள் கேஸ் சிலிண்டர்களை எடுத்து செல்ல வரிசையாக நின்றது. மருத்துவமனை, விடுதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக வணிக சிலிண்டர்களை கொண்டுவந்து கேஸ் நிரப்பி எடுத்து சென்றனர். இவ்வாறு ஏராளமான சிலிண்டர் ஏற்றி செல்லும் லாரிகள் மணலி ஆ.முல்லைவாயில் பகுதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
