×

பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் கோவை-தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

 

திருப்பூர், மார்ச் 11: பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கோவை மாவட்டம் போத்தனூரிலிருந்து தன்பாத் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06619) இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.வாரந்தோறும் புதன்கிழமை மாலை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை மதியம் தன்பாத்தை சென்றடைகிறது. வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் இந்த ரயில் இயக்கத்தை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.

இந்த ரயிலானது வாரம் தோறும் புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு போத்தனூர் ரயில்நிலையத்தில் புறப்பட்டு 6:10 மணிக்கு கோவை ரயில் நிலையம், 7:10 மணிக்கு திருப்பூர், 8:15 மணிக்கு ஈரோடு மார்க்கமாக வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு தன்பாத்தை சென்றடைகிறது. இது திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலம் செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PM Modi ,Goa ,Thanbad ,Tiruppur ,Bodhanur ,Tanbad ,Goa District ,Bottanur ,train station ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்